நிஜ உலகம், நிஜ மனிதர்களோடு  அசத்த வரும் 'டாம் அண்ட் ஜெர்ரி' கூட்டணி..

tom and jerry

குழந்தைகள் மட்டுமேகார்ட்டூன் பார்ப்பார்கள்என்பதுபொதுவான கருத்து.அக்கருத்தினைஉடைத்தகார்ட்டூன்கள்மிகவும் குறைவு. அவற்றுள்மிகவும் புகழ்பெற்றது, 'டாம்அண்ட்ஜெர்ரி'கார்ட்டூன்கள்.இந்த கார்ட்டூன்கள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை,இன்றும் அனைவராலும்ரசித்து பார்க்கப்படுகிறது.

'டாம் அண்ட் ஜெர்ரி'கார்ட்டூன்கள் முதன்முதலாக 1940 ஆம் ஆண்டு, வில்லியம்ஹன்னாமற்றும்ஜோசப்பார்பேராஆகியோரால் உருவாக்கப்பட்டது. இதனைதொடர்ந்து, 1992 ஆம் ஆண்டு,முதன் முதலாக'டாம்அண்ட்ஜெர்ரி'திரைப்படம் வெளியானது. அதனை தொடர்ந்து, இதுவரை 16 'டாம் அண்ட்ஜெர்ரி'திரைப்படங்கள் வெளிவந்துள்ளன.

இதுவரை வெளிவந்த'டாம்அண்ட்ஜெர்ரி'படங்கள்,அனிமேஷன்திரைப்படங்களாகும். இந்தநிலையில், தற்போதுமுதன் முதலாக'டாம்அண்ட்ஜெர்ரி'கார்ட்டூன், அதேபெயரில்,லைவ்ஆக்ஷன் படமாகவெளியாகவுள்ளது. புகழ் பெற்ற ஆங்கிலபடத்தயாரிப்பு நிறுவனமானவார்னர்ப்ரோஸ்தயாரிக்கும் இந்த லைவ்ஆக்ஷன்படத்தில், நிஜஉலகில், நிஜமனிதர்களோடு இணைந்து நம்மைசிரிக்க வைக்க இருக்கின்றன டாமும்ஜெரியும்.

'டாம் அண்ட்ஜெர்ரி'லைவ்ஆக்‌ஷன் படம், அடுத்த வருடம் வெளியாகவிருக்கிறது. இந்த லைவ் ஆக்ஷன் படத்தின்ட்ரைலர்தற்போது வெளியாகி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 'டாம் அண்ட்ஜெர்ரி'புது வடிவில் வெளியாகவுள்ளதை, உலகமெங்கிலும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

animation
இதையும் படியுங்கள்
Subscribe