Skip to main content

நிஜ உலகம், நிஜ மனிதர்களோடு  அசத்த வரும் 'டாம் அண்ட் ஜெர்ரி' கூட்டணி..

Published on 18/11/2020 | Edited on 18/11/2020
tom and jerry

 

 

குழந்தைகள் மட்டுமே கார்ட்டூன் பார்ப்பார்கள்  என்பது பொதுவான கருத்து .அக்கருத்தினை உடைத்த கார்ட்டூன்கள்  மிகவும் குறைவு. அவற்றுள்  மிகவும் புகழ்பெற்றது, 'டாம் அண்ட் ஜெர்ரி' கார்ட்டூன்கள்.  இந்த கார்ட்டூன்கள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, இன்றும் அனைவராலும் ரசித்து பார்க்கப்படுகிறது.

 

'டாம் அண்ட் ஜெர்ரி' கார்ட்டூன்கள் முதன்முதலாக 1940 ஆம் ஆண்டு, வில்லியம் ஹன்னா  மற்றும் ஜோசப் பார்பேரா ஆகியோரால் உருவாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, 1992 ஆம் ஆண்டு, முதன் முதலாக 'டாம் அண்ட் ஜெர்ரி' திரைப்படம் வெளியானது. அதனை தொடர்ந்து, இதுவரை 16 'டாம் அண்ட் ஜெர்ரி' திரைப்படங்கள் வெளிவந்துள்ளன.

 

இதுவரை வெளிவந்த 'டாம் அண்ட் ஜெர்ரி' படங்கள், அனிமேஷன்  திரைப்படங்களாகும். இந்தநிலையில், தற்போது முதன் முதலாக 'டாம் அண்ட் ஜெர்ரி' கார்ட்டூன், அதே பெயரில், லைவ் ஆக்ஷன் படமாக வெளியாகவுள்ளது. புகழ் பெற்ற ஆங்கில படத்தயாரிப்பு நிறுவனமான வார்னர் ப்ரோஸ் தயாரிக்கும் இந்த லைவ் ஆக்ஷன் படத்தில், நிஜ உலகில், நிஜ மனிதர்களோடு இணைந்து நம்மை சிரிக்க வைக்க இருக்கின்றன டாமும் ஜெரியும். 

 

 


'டாம் அண்ட் ஜெர்ரி' லைவ் ஆக்‌ஷன் படம், அடுத்த வருடம் வெளியாகவிருக்கிறது. இந்த லைவ் ஆக்ஷன் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 'டாம் அண்ட் ஜெர்ரி' புது வடிவில் வெளியாகவுள்ளதை, உலகமெங்கிலும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"கேப்டன் 7-னோடு சாகசங்கள் காத்திருக்கின்றன" - ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சாக்ஷி தோனி!

Published on 07/04/2021 | Edited on 07/04/2021

 

MSD

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. பெரும் ரசிகர் கூட்டத்தைக் கொண்டிருக்கும் இவர், 7ஆம் எண் ஜெர்சியை அணிந்து விளையாடினர். இந்தநிலையில் தோனியின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து அனிமேஷன் தொடர் ஒன்று தயாராகி வருகிறது. இத்தொடருக்கு ‘கேப்டன் 7’ என பெயரிடப்பட்டுள்ளது.

 

தோனி என்டர்டெயின்மென்ட் மற்றும் பிளாக் ஒயிட் ஆரஞ்சு ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த அனிமேஷன் தொடரை தயாரிக்கின்றன. இந்தியாவின் முதல் ஸ்பை-யூனிவெர்ஸ் (SPY UNIVERSE) அனிமேஷன் தொடராக  ‘கேப்டன் 7’ உருவாகவுள்ளது. தற்போது இந்த தொடருக்கான ப்ரீ -ப்ரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

 

 

இதுகுறித்து மகேந்திர சிங் தோனி, “இந்தத் தொடரின் கான்செப்டும் கதையும் அருமையாக உள்ளது. இது கிரிக்கெட்டுடன் சேர்த்து எனது மற்ற ஆர்வங்களையும் உயிர்ப்பிக்கும்" என தெரிவித்துள்ளார். "கேப்டன் 7னோடு உங்களுக்கு நிறைய சாகசங்கள் காத்திருக்கின்றன" என தோனியின் மனைவியும், தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான சாக்ஷி தோனி தெரிவித்துள்ளார். கேப்டன் 7 அனிமேஷன் தொடரின் முதல் சீசன் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பால் தோனி ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

 

Next Story

‘டாம் அண்ட் ஜெரி’ இயக்குனர் மரணம்!

Published on 20/04/2020 | Edited on 20/04/2020


பலரும் தங்களின் குழந்தை பருவத்தில் பெரும்பாலும் பார்த்து சிரித்த கார்டூன் என்றால் அது டாம் அண்ட் ஜெரியாக இருக்கும். உலகம் முழுவதும் டாம் அண்ட் ஜெரி என்ற கார்டூன் தொடருக்குப் பல தரப்பில் ரசிகர்கள் உண்டு. 
 

gene deitch


 


இந்தக் கார்டூனை உருவாக்கி மற்றும் டாம் அண்ட் ஜெரி தொடரை இயக்கியவர் ஆஸ்கார் விருது பெற்ற இல்லுஸ்ட்ரேட்டர் ஜீன் தீச். அதேபோல மற்றோரு பிரபல கார்டூன் தொடரான ‘பாபாய் தி செய்லர் மேன்’ கார்டூன் தொடரில் சில எபிஸோட்களையும் இவர் இயக்கியுள்ளார். 

1924-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி அமெரிக்காவின் சிகாகோ நகரில் பிறந்த ஜீன், செக்கஸ்லோவாக்கியாவின் பிராக் நகருக்கு 1959-ம் ஆண்டு 10 நாட்கள் பணிக்காக சென்று, அங்கே ஒருவரின் மீது காதல் மலருந்து அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.

கடந்த 16-ம் தேதி எதிர்பாராதவிதமாக ஜீன் தீச், பிராக் நகரிலுள்ள தனது இல்லத்தில் மரணமடைந்துவிட்டார் என்று அவருடைய பப்ளிஷர் தெரிவித்துள்ளார். ஜீன் தீச்சுக்கு வயது 95.