Advertisment

கர்நாடக தேர்தலில் களமிறங்கிய தெலுங்கு நடிகர் - பாஜகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம்

Advertisment

Tollywood actor Brahmanandam to campaign for BJP in Karnataka

கர்நாடகாவில் மே 10 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆட்சியிலிருக்கும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலுக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில், அங்கு இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

Advertisment

கட்சியில் உள்ள பேச்சாளர்கள் தாண்டி சினிமா பிரபலங்களும் கட்சியினருக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். அந்த வகையில் பாஜகவுக்கு ஆதரவாக கன்னட நடிகர்கள் கிச்சா சுதீப் மற்றும் தர்ஷன் ஆகியோர் பிரச்சாரம் செய்தனர். மறுபுறம் இன்னொரு பெரிய நடிகரான சிவா ராஜ்குமார் மற்றும் நடிகர் துனியா விஜய் ஆகியோர் காங்கிரசுக்கு ஆதரவாகபிரச்சாரம் மேற்கொண்டனர்.

இப்படி கன்னட நடிகர்கள் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் பிரமானந்தம் தற்போது தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார். கர்நாடகாவில் தெலுங்கு மக்கள் அதிகம் வசிக்கும் சிக்கபல்பூர் தொகுதியில் பாஜக சார்பில் சுகாதார அமைச்சர் சுதாகருக்கு ஆதரவாக இன்று பிரச்சாரம் செய்துள்ளார்.

karnataka karnataka election
இதையும் படியுங்கள்
Subscribe