Advertisment

“அப்பா தொடர்ந்து 4 -ஆவது நாளாக சீராக இருக்கிறார்”- எஸ்.பி.பி சரண்!

spb

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் கரோனா தொற்று, பலரையும் பாதித்து வருகிறது. பிரபல பாடகர் எஸ்.பி.பியும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு எஸ்.பி.பி-யின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து எஸ்.பி.பி குறித்து பல வதந்திகள் வெளியாகின. இதனால் அவ்வப்போது அவரது மகன், வீடியோவின் மூலம் மக்களுக்கு எஸ்.பி.பி உடல்நிலை குறித்து தெரிவித்து வந்தார்.

Advertisment

நேற்று எஸ்.பி.பி குறித்து அவர் சமூக வலைத்தளத்தில் தெரிவிக்கையில், “தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது. உடல்நிலை தேறிவருவதற்கான அறிகுறிகள் தெரிகிறது. நானும் எனது சகோதரியும் அப்பாவை இன்று சந்தித்தோம். மகளைக் கண்டதில் மகிழ்ச்சி அடைந்தார்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில், “தொடர்ந்து நாளாவது நாளாக எஸ்.பி.பி-யின் உடல்நிலை சீராக இருக்கிறது. இதற்கெல்லாம் கடவுளின் ஆசியும், உங்களைப் போன்ற மக்களின் ஆசீர்வாதமும்தான் காரணம். இந்த வார இறுதிக்குள் நல்லபடியாக குணமடைவார் என்று நினைக்கிறோம். திங்கட்கிழமை அன்று நல்லசெய்தி வரும் என்று நான் நம்புகிறேன்” எனஎஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe