Advertisment

வாக்காளர்களிடம் மன்னிப்பு கேட்ட விஜய்... வைரலாகும் வீடியோ

tn urban local body election 2022 vijay apologized voters

Advertisment

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மாநிலம் முழுவதும் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பொதுமக்கள் வரிசையில்ஆர்வமுடன் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். கரோனா அச்சுறுத்தல் நிறைந்த சூழலுக்கு இடையே நடைபெறும் தேர்தல் என்பதால் வாக்குப்பதிவு மையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. பொதுமக்கள் மட்டுமின்றி திரைத்துறையினரும் அரசியல் பிரமுகர்களும் வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் தன்னுடைய வாக்கை செலுத்தினார். நடிகர் விஜய் வாக்கு சாவடிக்கு வருகை தந்தபோதுஅவரை பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிந்ததால் சிறிது நேரம் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் வாக்கு செலுத்த வந்தவர்களுக்கு இடையூறு ஏற்பட்டதைதொடர்ந்து நடிகர் விஜய் அங்கிருந்தவர்களிடம் கை கூப்பி மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

actor vijay LOCAL BOAY ELECTION
இதையும் படியுங்கள்
Subscribe