Advertisment

"பாத்திரம் சொன்னது படத்தின் கதை, சூத்திரம் தந்தது விடியலின் விதை" - அமைச்சர் சேகர் பாபு பாராட்டு

tn minister Praise udhayanidhi stalin and nenjukku needhi movie

அனுபவ் சின்ஹாவின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் 'ஆர்டிக்கள் 15'. இந்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இந்தியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது 'நெஞ்சுக்கு நீதி' என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.இப்படத்தைத் தமிழில்அருண்ராஜா காமராஜ் இயக்க,உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார். தான்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், ஆரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இப்படம் நேற்று (20.5.2022) வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவதோடு, திமுகவினரும் பாராட்டி வருகின்றனர்.

Advertisment

அந்தவகையில்இப்படத்தை பார்த்த இந்து சமய அறநிலையத்துறைஅமைச்சர் சேகர்பாபு பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,

Advertisment

"நெஞ்சுக்கு நீதியின் பேரனே!

பாத்திரம் சொன்னது படத்தின் கதை

சூத்திரம் தந்தது விடியலின் விதை !

நெஞ்சுக்கு நீதி திரைப்படம் அல்ல;

நிலத்துக்கு நீதிதரும் வரைபடம்!

நீண்ட வரலாற்றில் இடம்பெறும் !

நின்பெருமை நாளை வலம்வரும்!

படக்குழுவிற்கு வாழ்த்துக்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

minister sekar babu Udhayanidhi Stalin nenjukku needhi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe