Advertisment

"உங்களின் வாழ்த்து, ஊக்கத்தை அளிக்கிறது" -  முதல்வர் மு.க ஸ்டாலின்

tn cm stalin tweet about rajinikanth

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது சுயசரிதையை உங்களில் ஒருவன் (பாகம் 1) என்ற பெயரில் எழுதியிருந்தார். கடந்த மாதம் நடைபெற்ற இந்த புத்தக வெளியீட்டு விழாவில்,அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய சுயசரிதை நூலான 'உங்களில் ஒருவன்' புத்தகத்தை வெளியிட்டார்.இதனைத்தொடர்ந்து இந்த புத்தகத்தை படித்த நடிகர் ரஜினிகாந்த் முதல்வர் ஸ்டாலினை தொலைபேசியில் அழைத்து பாராட்டியுள்ளார்.

Advertisment

இந்நிலையில் ரஜினியின் பாராட்டிற்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ள முதல்வர் ஸ்டாலின், "உங்களது வாழ்த்தின் ஒவ்வொரு சொல்லும் எனக்கு மகிழ்ச்சியை மட்டுமல்ல; இன்னும் இன்னும் இந்த நாட்டு மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஊக்கத்தை அளிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

Actor Rajinikanth cm stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe