Skip to main content

'டி.எம்.சௌந்தரராஜன் சாலை' - முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

 

TM Soundararajan road CM Stalin inaugurates

 

திரைத்துறையில் கிட்டத்தட்ட 10,100 பாடல்களுக்கு மேல் பாடி இன்றும் குரல் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கிறார் மறைந்த பாடகர் டி.எம்.சௌந்தரராஜன். 60 வருடங்களுக்கு மேலாக திரைத்துறையில் பயணித்த இவர் தமிழைத் தவிர சௌராஷ்டிரா, கன்னடம், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பாடியுள்ளார். முதல் பாடலை தனது 24வது வயதில் பாடினார். கடைசி பாடலை 88வது வயதில் பாடினார். தனது 90வது வயதில் உடல்நலக்குறைவால் 2013ஆம் ஆண்டு காலமானார். 

 

இந்த நிலையில் டி.எம்.சௌந்தரராஜனின் 100வது பிறந்தநாளை ஒட்டி சென்னை மந்தைவெளியில் அவர் வாழ்ந்த வீடு அமைந்திருக்கும் சாலைக்கு ‘டி.எம்.சௌந்தரராஜன் சாலை’ என்ற பெயரை முதல்வர் மு.க.ஸ்டாலின் சூட்டுகிறார். இந்த நிகழ்ச்சி அவரது பிறந்தநாளான வருகிற 24ஆம் தேதி (24.03.2023) பிரம்மாண்டமாக நடக்கவுள்ளது. இந்நிகழ்ச்சியில் டி.எம்.சௌந்தரராஜன் பாடிய பாடல்களை நினைவுகூறும் வகையில் இன்னிசைக் கச்சேரியும் நடக்கவுள்ளது.