/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/499_22.jpg)
ரஜினிகாந்த் நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வேட்டையன்’. இப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் இன்று(10.10.2024) திரையரங்குகளில் வெளியாகிவுள்ளது.
தமிழகத்தில் முதல் காட்சி காலை 9 மணிக்கு திரையிடப்பட்டது. படத்தை வரவேற்க ரஜினி ரசிகர்கள் காலை முதலே திரையரங்கில் கூடியிருந்தனர். மேலும் ரஜினி பாடலுக்கு நடனமாடி, பட்டாசு வெடித்து, மேளதாளத்துடன் கொண்டாடினர். இதையடுத்து சென்னையில் உள்ள திரையரங்கில் தனுஷ், அனிருத், ஐஸ்வர்யா, சௌந்தர்யா, லதா ரஜினிகாந்த், த.செ.ஞானவேல், துஷாரா விஜயன், கார்த்திக் சுப்புராஜ், ரோகிணி ஆகியோர் ரசிகர்களுடன் படம் பார்த்து மகிழ்ந்தனர். இதனிடையே சூர்யா, படம் வெற்றி பெற தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில் த.செ.ஞானவேல் திரையரங்கில் படம் பார்த்தவுடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தியேட்டரில் அனைவரும் ரசித்து பார்த்தனர். ஒரு ரசிகனாக தியேட்டரில் அவர் படம் பார்ப்பது பயங்கரமாக இருக்கும். இப்போது டைரக்டராக பார்ப்பது இன்னும் கூஸ்பம்ஸாக இருந்தது. நாங்கள் சாதித்துவிட்டதாக நினைக்கிறேன்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)