Advertisment

"கார் அதற்காகத் தான் வாங்கப்பட்டது" - எஸ்.ஜே.சூர்யா பேட்டி

publive-image

Advertisment

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகரும், திரைப்பட இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா, "டிசம்பர் 2 ஆம் தேதி அமேசான் ப்ரைம்ல 'வதந்தி' வெப் சீரிஸ் இன்டர்நேஷனல் அளவுல வெளியாக உள்ளது. இன்னைக்கு ட்ரைலர் ரிலீஸ் ஆகியிருக்கு. நல்லா என்ஜாய் பண்ணுங்க. இது நம்ம எல்லாருடைய வெற்றியா பாக்கறேன். பிளீஸ், டூ வாட்ச் வதந்தி ஆன் ப்ரைம். 'கில்லர்' டைட்டில் இஸ் கன்பார்ம்; காரும் அதுக்காக வாங்கப்பட்டது தான். ஏன் டேட்டே இன்னும் நாலு மாசம் கழிச்சி தான் எனக்கு கிடைக்கும் போல இருக்கு.

கூடியே சீக்கிரம் அதோட அப்டேட்லாம் தரன், நான்ஸ்டாப்பா படங்கள் வரிசையா ரிலீஸ் ஆகுது. இப்போ டிசம்பர் 2- ஆம் தேதி இந்த வெப் சீரிஸ். அப்புறம் டிசம்பர் 12- ஆம் தேதி முக்கியமான அனௌன்ஸ்மென்ட் ஒன்னு வருது. அதுவும் பாருங்க. பிப்ரவரில பொம்மை ரிலீஸ் பிளான் பண்ணிருக்கேன். இதற்கிடையில மார்க் ஆண்டனி, இன்னும் ரெண்டு படலாம் முடிச்சிட்டு, ஏப்ரல்ல கில்லர் ஸ்டார்ட் பண்லாம்.

தியேட்டர் ஒரு கண்ணுனா; ஓடிடி-யை இன்னொரு கண்ணா தான் பாக்கறேன். விஷால் சார் எனக்கு ரொம்ப பிரதர் மாதிரி ஆகிட்டாரு. ஹீ இஸ் சச் எஸ்வீட் பர்சன். சூட்டிங் ஸ்பாட்ல என்ஜாய் பண்ணி, என்ஜாய் பண்ணி நடிக்கறேன். எனக்குன்னுகிரேட் கண்டன்ட் வரும் போது, நான் அத ரொம்ப சந்தோஷமா ஏத்துட்டு தான் நடிக்கிறேன்." என்றார்.

Advertisment

அப்போதுசெய்தியாளர்களின்நடிகர்கள் விஜய், அஜித் வைத்து படம் எடுக்க வாய்ப்பு இருக்கா? என்ற கேள்விக்கு பதிலளித்த எஸ்.ஜே.சூர்யா, "நான் என்னை வச்சி டைரக்ட் பண்றதுக்கே டைம் இல்லாம இருக்கு. பாப்போம், இறைவன் அப்படி எதாவது அமைச்சா நல்லது நடக்கட்டும்" என்று கூறினார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe