பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘கனா’ படத்தில், ஹீரோயினாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்தார். இந்த படத்தை பிரபல பாடகர், பாடலாசிரியர், நடிகராக அறியப்பட்ட அருண்ராஜா காமராஜ் இயக்கினார். சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனத்தில் எடுக்கப்பட்ட முதல் படம் இது. கடந்த டிசம்பர் மாதம் பல போட்டிகளுடன் வெளியான இந்த படம், வெற்றிகரமாக ஓடி நல்ல வசூலை வாரிக் குவித்தது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்நிலையில், தமிழில் வெற்றிகரமாக ஓடிய இந்த படம் தற்போது தெலுங்கிலும் ரீமேக் ஆக உள்ளது. தெலுங்கில் ‘கௌசல்யா கிருஷ்ணமூர்த்தி’ என்னும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கனாவில் ஹீரோயினாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ்தான் தெலுங்கிலும் ஹீரோயினாக நடிக்கிறார்.
பிமநேனி சீனிவாச ராவ் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் மூன்றாவது தெலுங்குப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.