titanic movie actress Kate Winslet in hospital

Advertisment

உலகப்புகழ் பெற்ற டைட்டானிக் படத்தின் கதாநாயகி கேட் வின்ஸ்லெட் தற்போது 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற டிசம்பர் 16-ஆம் தேதி பிரம்மாண்டமாக திரையரங்கில் வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து எலன் குராஸ் இயக்கத்தில் 'லீ' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஆண்டனி பென்ரோஸ் எழுதிய 'தி லைஃப்ஸ் ஆஃப் லீ மில்லர்' என்ற நாவலை தழுவி உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 'லீ' படத்தின் படப்பிடிப்பு குரோஷியா நாட்டில் நடைபெற்று வருகிறது. அப்போது கேட் வின்ஸ்லெட் எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பின்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் திட்டமிட்டபடி படப்பிடிப்பில் கலந்துகொள்வார் எனவும் படக்குழு தெரிவித்துள்ளனர்.