'Titanic' to be released after a long days - Release date announced

'மெட்ராஸ்' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் 'கலையரசன்'. சமீபத்தில் வெளியான 'குதிரைவால்' படத்தில் இவரது நடிப்பை பலரும் பாராட்டியிருந்தனர். கலையரசன், கயல் ஆனந்தி நடிப்பில் உருவான படம் 'டைட்டானிக் : காதலும் கவுந்து போகும்'. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியிருந்தது. படத்தின் பணிகள் முடிக்கப்பட்டு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பின்பு சில காரணங்களால் தள்ளிப்போனது.

Advertisment

தற்போது இப்படம் 'மே 6'-ஆம் தேதியன்று திரையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை இப்படத்தின் தயாரிப்பாளர் சி.வி.குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். அதோடு ஒரு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். இப்படத்தில் காளி வெங்கட், ஆஷ்னா சவேரி, ராகவ் விஜய், மதுமிதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். கவுரவ வேடத்தில் இயக்குநர் பாலாஜி மோகன் மற்றும் நடிகை காயத்ரி நடித்துள்ளனர். இப்படத்தை 'திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்ட்' சார்பாக சி.வி.குமார் தயாரிக்கிறார்.நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார்.

Advertisment