மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த சிறுமி ஆருணி. எஸ். குருப். இவர் டிக் டாக் விடியோக்களின் மூலம் பல ரசிகர்களை ஈர்த்துள்ளார். ஒன்பது வயதே ஆகும் இந்த இணைய பிரபலம் உயிரிழந்துள்ள சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

aaruni

சிறுமி ஆருணி பல நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் கடும் ஜுரத்தாலும், தலைவலியாலும் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சிறுமி திருவநந்தபுரத்திலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், அடையாளம் கண்டறியப்படாத நோயினால் மூளை பாதிப்படைந்து உயிரிழந்துள்ளார்.

ஆருணி தற்போது நான்காம் வகுப்பு படித்து வந்த நிலையில் அவருடைய அப்பா கடந்த வருடமே சவுதி அரேபியாவில் உயிரிழந்தார். ஆருணியின் ரசிகர்கள் அவருக்கு சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.