Published on 31/07/2020 | Edited on 31/07/2020

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கரோனா பாதிப்புகளால் மூன்று மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது. சினிமா ஷூட்டிங் இந்தியாவில் எங்கும் நடைபெறவில்லை. இதனால் தினக்கூலியை நம்பியிருக்கும் சினிமா தினக்கூலி பணியாளர்கள் மிகவும் கஷ்டத்தில் உள்ளனர். இந்த காலகட்டத்தில் பலர் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர்களில் முதன்மையானவராக இருக்கும் டைகர் ஷ்ராஃப் நடன கலைஞர்களுக்கு உதவி செய்துள்ளார்.
நடனக் கலைஞர்கள் சுமார் 100 பேருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான ரேஷன் பொருட்களை தந்து உதவியுள்ளார். டைகரின் இந்த நடவடிக்கைக்கு சமூக ஊடகங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.