'துணிச்சலான காட்சியில் முக சுளிப்பே இல்லாமல் நடித்தார் சமந்தா' - பிரபல இயக்குனர் பாராட்டு  

samantha

ஆரண்ய காண்டம் படத்திற்கு பிறகு நீண்ட நாள் கழித்து தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள படம் சூப்பர் டீலக்ஸ். இப்படத்தில் ஷில்பா என்னும் திருநங்கை வேடத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ளார். நாயகியாக சமந்தா நடிக்க பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், காயத்ரி, பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் குறித்து இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா பேசியபோது...

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

"சமந்தா இடம்பெறும் காட்சியில் தான் படம் தொடங்கும். மிகவும் துணிச்சலான காட்சி அது. முக சுளிப்பே இல்லாமல் சமந்தா இயல்பாக நடித்துக்கொடுத்தார். இந்த படத்தின் கதையை ஓரிரு வரிகளில் கூற முடியாது. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத 13 கதாபாத்திரங்கள் இணையும் புள்ளிகள் தான் கதை. ஒருவரது வாழ்க்கை மற்றவர்களை எப்படி பாதிக்கிறது என்பதே திரைக்கதை. படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித அனுபவத்தை தரும். இந்த படம் ஆந்தாலஜி வகையை சேர்ந்தது என்று செய்தி வெளியானது. அப்படி இல்லை. ஒரே கதை தான். சில மணி நேரங்களில் நடக்கும் கதை" என்றார்.

super deluxe
இதையும் படியுங்கள்
Subscribe