Skip to main content

'தூப்பாக்கி முனை' வெற்றி விழா கொண்டாடிய படக்குழு 

Published on 08/01/2019 | Edited on 08/01/2019
thuppaaki

 

 

வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரித்து, விக்ரம் பிரபு நாயகனாக நடித்த 'தூப்பாக்கி முனை' திரைப்படம் வெற்றிகரமாக 25வது நாளை கடந்து பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த 25வது நாள் வெற்றிவிழாவை சிறப்பாக எளிமையாக படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, துப்பாக்கி முனை திரைப்படத்தின் ஹீரோ விக்ரம் பிரபு, இயக்குநர் தினேஷ் செல்வராஜ், ஒளிப்பதிவாளர் ராசாமதி, இசையமைப்பாளர் எல்.வி.முத்து கணேஷ், படத்தொகுப்பாளர் புவன் ஸ்ரீநிவாசன், டிசைனர் பவன், மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு  ஆகியோர் கலந்து கொண்டனர்.  மேலும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அம்மு அபிராமி. மிர்ச்சி ஷா மற்றும் படத்தில் பணிபுரிந்த அனைவரும் கலந்துகொண்டு 'துப்பாக்கி முனை' திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.


 

சார்ந்த செய்திகள்