thunivu varisu ott release date reports

Advertisment

தமிழ்த் திரையுலகினர் மற்றும் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஜித்தின் 'துணிவு' மற்றும் விஜய்யின் 'வாரிசு' படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இரண்டு படங்களும் நல்ல வசூலை ஈட்டி வருவதாகச் சொல்லப்படுகிறது. இதில் வாரிசு படம் ரூ.210 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்தநிலையில் துணிவு வசூல் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் படக்குழு இன்னும் வெளியிடவில்லை. விரைவில் வசூல் நிலவரம் குறித்து அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் துணிவு மற்றும் வாரிசு படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்ததகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படிஅடுத்த மாதம் பிப்ரவரி 10ஆம் தேதி இரு படங்களும் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. துணிவு படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் எனவும் வாரிசு படம் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகும் எனவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திரையரங்குகளில் ஒரே தேதியில் வெளியான இரு படங்களும் ஓடிடி-யிலும்ஒரே தேதியில் வெளியாகவுள்ளதாக சொல்லப்படுவது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.