Advertisment

"மங்காத்தா படத்தின் கலவை ; விஜய்யின் மேனரிசம்" ; துணிவு - வாரிசு குறித்து லிங்குசாமி

thunivu varisu lingusamy review

தமிழ்த்திரையுலகினர் மற்றும் ரசிகர்களால்பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஜித்தின் 'துணிவு' மற்றும் விஜய்யின் 'வாரிசு' படங்கள் கோலாகலமாக வெளியாகி திரையரங்கில் வெற்றி நடைபோடுகிறது. இரு படங்களையும்பார்ப்பதற்குமக்கள் கூட்டம் கூட்டமாகத்திரையரங்கில் கூடுகிறார்கள். இதனால் திருவிழா போலக் காட்சி அளிக்கிறது திரையரங்கம்.

Advertisment

முதல் நாள் திரையரங்கில் ரசிகர்களின்கொண்டாட்டம், அடாவடி, உயிரிழப்பு, திரையரங்கு சேதம், பேனர் கிழிப்பு என பல சம்பவங்கள் அரங்கேறியது. இந்த நிலையில் படம் பார்த்த பலரும் தங்களது கருத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில் இயக்குநர்லிங்குசாமி இரு படங்களையும்பார்த்து தனது விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். துணிவு குறித்துஅவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "அஜித் சாரின் மங்காத்தா மற்றும் வினோத்தின் சதுரங்கவேட்டையின் கலவையாக துணிவு இருந்தது. சுவாரசியமாகவும் இருந்தது. பொங்கலுக்கு படம் வெற்றி பெற்றதற்குபடக்குழுவுக்கு வாழ்த்துக்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

வாரிசு குறித்து வெளியிட்டுள்ள பதிவில், "வாரிசு படம் பிடித்திருந்தது. படத்தை மொத்தமாகத்தாங்கி பிடிக்கிறார் விஜய். குறிப்பாக 2ஆம் பாதியில் அவருடைய பழைய மேனரிசம் இருந்தது மகிழ்ச்சியளித்தது" எனக் குறிப்பிட்டுப் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் "இந்த பொங்கலுக்கு வாரிசு மற்றும் துணிவு இரண்டும் திருப்தி அளித்தது" என இரண்டு படங்களையும் பாராட்டியுள்ளார்.

directorlingusamy varisu movie Thunivu ACTOR AJITHKUMAR actor vijay
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe