thunivu update given by ghibran

Advertisment

மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் 'துணிவு' படத்தில் நடித்து வருகிறார் அஜித். இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, விசாகப்பட்டினம், பாங்காக் உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்று வந்தது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="6efddd78-51a1-424f-836a-c7191692f4a8" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/NMM-500x300_7.jpg" />

மேலும் இப்படத்தின் டப்பிங் பணிகள் முழுவீச்சுடன் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அஜித் தன் டப்பிங் பணியை முடித்துள்ளார். இப்படத்தில் அனிருத் 'சில்லா சில்லா' என்ற பாடலைப் பாடியுள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது. தமிழகத்தில் உதயநிதியின் 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார். 'ஏகே 62' எனத் தற்காலிகமாக அழைக்கப்படும் அப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார்.

Advertisment

இந்நிலையில் 'துணிவு' படத்தின் பாடல் குறித்து ஜிப்ரானிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜிப்ரான் "பாட்டு செம மாஸ் பாடலாக இருக்கும். அஜித் சாருக்கு ஒரு ரசிகனா என்ன பண்ணனும்னு நினைக்கிறேனோ, எந்த மாதிரி நடனம் இருக்கும்னு நினைக்கிறேனோ அதை பண்ணியிருக்கேன்" என பேசியுள்ளார். இதனைத்தொடர்ந்து விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.