ADVERTISEMENT

தெறிக்கும் வசனங்கள்; துள்ளல் நடனம்; அதகளம் செய்யும் அஜித்; வெளியானது துணிவு ட்ரைலர்

07:26 PM Dec 31, 2022 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

மூன்றாவது முறையாக ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் படம் 'துணிவு'. இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் 'சில்லா சில்லா', 'காசேதான் கடவுளடா', 'கேங்ஸ்டா' உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அடுத்த மாதம் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ள நிலையில், ஒரு புதிய அப்டேட் நாளை டிசம்பர் 31ஆம் தேதி வெளியாகவுள்ளது.

'துணிவு' படத்தின் கதாபாத்திர பெயர் மற்றும் போஸ்டரை படக்குழு வெளியிட்டு வருகிறது. படத்தில் பட்டிமன்ற பேச்சாளர் மோகன சுந்தரம் 'மை பா', பிரேம் - 'பிரேம்', பகவதி பெருமாள் - ராஜேஷ், ஜான் கொக்கேன் - க்ரிஷ், வீரா - ராதா, ஜிஎம் சுந்தர் - முத்தழகன், அஜய் - ராமச்சந்திரன், சமுத்திரக்கனி - தயாளன் உள்ளிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் மஞ்சு வாரியர் கண்மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் 'துணிவு' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இதில் அஜித் வங்கியில் கொள்ளை அடிக்க தனது குழுவுடன் செல்வது போலவும் வங்கியைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. எதிர்மறை கதாப்பாத்திரத்தில் அஜித் மிரட்டுகிறார். துள்ளலான நடிப்பும் ஆட்டமும் வசனங்களும் ட்ரைலரை லைக் செய்ய வைக்கின்றன. அஜித் பேசும் வசனங்களில் டோன்ட் ஆக்ட் ஹீரோ; அந்த வேலைய பாக்க நான் இருக்கேன் எனப் பேசும் வசனம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

ஜிப்ரானின் இசை கவனிக்க வைக்கின்றன. ஹெச் வினோத்தின் உழைப்பு ட்ரைலரில் தெரிகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT