thunivu third single update Gangstaa song released date announced

மூன்றாவது முறையாக ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 'துணிவு' படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisment

இப்படத்தின் முதல் பாடல் 'சில்லா சில்லா' மற்றும் இரண்டாவது பாடல் 'காசேதான் கடவுளடா' உள்ளிட்ட பாடல் வெளியாகிவரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது முன்றாவது பாடல் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி 'கேங்ஸ்டா' பாடல் வரும் 25ஆம் தேதி வெளியாகும் எனத்தெரிவித்துள்ளது. மேலும் பாடலின் வரிகளையும் பகிர்ந்துள்ளது. இந்த வரிகளைப் பார்க்கையில் படத்தில் அஜித் ஒரு கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது போல் தெரிகிறது. பாடலில்"துணிஞ்சா வெற்றி நமதே" என்ற வரிகள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisment