thunivu release update given by udhayanithi

மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் 'துணிவு' படத்தில் நடித்து வருகிறார் அஜித். இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, விசாகப்பட்டினம், பாங்காக் உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்று வந்தது.

Advertisment

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இப்படத்திற்கு 'ஏகே 62' எனத் தற்காலிகமாகத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் 'துணிவு' படம் அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாகும் எனத்தகவல் வெளியான நிலையில் தற்போது அதனை உதயநிதி உறுதி செய்துள்ளார். அதன்படி துணிவு படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை உதயநிதியின் 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து அதற்கான போஸ்டரையும் பகிர்ந்துள்ளார். மேலும் இப்படம் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனிடையே இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'வாரிசு' படமும்பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாகத்திகழும் அஜித் மற்றும் விஜய் ஆகியோரின் படங்கள் ஒரே சமயத்தில் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் இரு படக்குழுவும் விரைவில் ரிலீஸ் தேதியை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.