thunivu release date released

Advertisment

மூன்றாவது முறையாக ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் படம் 'துணிவு'. இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் 'சில்லா சில்லா', 'காசேதான் கடவுளடா', 'கேங்ஸ்டா' உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. மேலும் ட்ரைலரும்சில தினங்களுக்குமுன்பு வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்தது. ட்ரைலரில் ரிலீஸ் தேதி இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் அதில் ரிலீஸ் தேதி இல்லை.

இந்த நிலையில் துணிவு படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. பொங்கலை முன்னிட்டு இப்படம் வெளியாகும் என்று அறிவித்த நிலையில் வருகிற 11ஆம்தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Advertisment

பொங்கலை முன்னிட்டு விஜய்யின் வாரிசு படமும்வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்த நிலையில் இன்னும் ரிலீஸ் தேதிவெளியிடவில்லை. எனவே விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.