Advertisment

"கோலிவுட்டில் முதல் முறை" ; வானத்தில் ப்ரோமோஷன் செய்த 'துணிவு' படக்குழு

thunivu promotion starts in other countries

மூன்றாவது முறையாகஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் 'துணிவு'. இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.போனிகபூர் தயாரிக்கும் இப்படத்திற்குஜிப்ரான்இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisment

இப்படத்தின் 'சில்லா சில்லா', 'காசேதான்கடவுளடா', 'கேங்ஸ்டா' உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி நல்லவரவேற்பைபெற்று வருகிறது. அடுத்த மாதம் பொங்கலை முன்னிட்டு இப்படம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின்ப்ரோமோஷன்பணிகளை தற்போது வெளிநாட்டு உரிமையை வாங்கியலைகாநிறுவனம் தொடங்கியுள்ளது.

Advertisment

அதன் ஒரு பகுதியாக வானத்தில்ஸ்கைடைவிங்செய்யும் வீரர்களின் மூலம், துணிவு பட போஸ்டரை பறக்கவிட்டுபுரோமோஷனில்ஈடுபட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவை தங்களது சமூகவலைதளத்தில்வெளியிட்டு, முதன்முறையாக ஒரு கோலிவுட் படத்திற்கு இதுவரை பார்த்திராத அறிவிப்பு என்றும், அந்த அப்டேடை வரும் 31ஆம் தேதி வெளியிடுகிறோம்என்றும் லைகா அதன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

lyca Thunivu ACTOR AJITHKUMAR
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe