Thunivu at French television  

Advertisment

பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது அஜித் நடித்த ‘துணிவு’. மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் உருவான இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். போனி கபூர் தயாரித்த இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சிறப்பானதாக இருப்பதாகக்கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் டிவி விவாத நிகழ்வில் துணிவு படம் குறித்துவிவாதிக்கப்பட்டது என்கிற வீடியோ சமீபத்தில் வைரலாகி வருகிறது. முதலில் இது போட்டோஷாப் செய்யப்பட்டதாக இருக்கும் என்று நினைத்தவர்கள் வீடியோ பார்த்ததும் அதன் உண்மைத்தன்மையை ஏற்றுக்கொண்டு வருகிறார்கள்.

அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்திய சினிமாவின் ‘ஜார்ஜ் குளூனி’ என்று அஜித்தை குறிப்பிட்டிருக்கிறார்கள். அது அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்ட மனநிலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தி குறித்து துணிவு தயாரிப்பாளர் போனிகபூர் “பிரான்சில் ‘துணிவு’ படத்தின் வரவேற்பைக் கண்டு நான் பரவசமடைந்தேன். பார்வையாளர்கள் மிகவும் உற்சாகமாக படத்தில் மூழ்கியுள்ளனர். இது ஓர் அற்புதமான உணர்வு” எனத் தெரிவித்துள்ளார்.