Advertisment

ஹெச்.வினோத்துக்கு துப்பாக்கி சுடக் கற்றுக்கொடுக்கும் அஜித் - வீடியோ வைரல்

thunivu Behind the scenes video viral on internet

Advertisment

மூன்றாவது முறையாக ஹெச்.வினோத் - அஜித் கூட்டணியில் கடந்த பொங்கலைமுன்னிட்டு வெளியான துணிவு படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. போனி கபூர் தயாரித்திருந்த இப்படத்தில்மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க, ஜிப்ரான் இசையமைத்திருந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்று வரும் இப்படத்தின் வசூல் விவரம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், துணிவு படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. ஒரு வங்கியின் கொள்ளையை மையப்படுத்தி கதை நகர்வதால்வங்கி போல் ஒரு செட் போட்டு படக்குழு படமாக்கியிருக்கிறது என முன்பு தகவல் வெளியானது. இந்த வீடியோவை பார்க்கையில், அந்த வங்கி செட் பார்ப்பவர்களை ரசிக்க வைத்துள்ளது.

சில இடங்களில் அஜித் துப்பாக்கி சுடுவது பற்றி இயக்குநர் வினோத் மற்றும் நீரவ் ஷா உள்ளிட்டோருக்கு சொல்லி கொடுப்பது போல் தெரிகிறது. இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

Advertisment

அஜித் துணிவு படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'ஏகே 62' படத்தில் நடிக்கவுள்ளார். லைக்கா தயாரிக்கும் இப்படத்தில்வில்லனாக அரவிந்த் சாமியும் முக்கிய கதாபாத்திரத்தில் சந்தனமும் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தின்படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாகதிரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

h.vinoth ACTOR AJITHKUMAR Thunivu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe