Skip to main content

அனிருத்தின் தும்பா செய்த சாதனை !

Published on 23/02/2019 | Edited on 23/02/2019
anirudh

 

சில நேரங்களில் பெரிய நடிகர்கள் மற்றும் பெரிய படங்கள் தான் லட்சக்கணக்கான லைக்ஸ் மற்றும் ஷேர்களை பெறும் என்ற மாயையை சில விஷயங்கள் பிடிவாதமாக உடைக்கும். ஒரு சிலர் இதனை 'லக்' என்று அவர் சொல்லலாம், ஆனால் உண்மை மற்றும் யதார்த்தம் என்னவெனில் ரசிகர்கள் நல்ல மற்றும் மிகச்சிறப்பான கதை, ஐடியாக்களுக்கு காத்திருப்பதோடு, அவர்களின் நிபந்தனையற்ற அன்பையும் ஆதரவையும் அளிக்கிறார்கள். தற்போது குழந்தைகளின் ஃபேவரைட்டான அனிருத் மற்றும் டைகரஸ் தும்பா பங்கு பெறும் 'தும்பா' வீடியோ 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் யூட்யூப் பில் 1.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருப்பது இதை நிரூபணம் ஆக்குகிறது.

 

 

அனிருத் மற்றும் டைக்ரஸ் தும்பாவை  வைத்து இந்த வீடியோவை உருவாக்கிய இயக்குனர் ஹரிஷ் ராம் எல்.எச். இதுகுறித்து கூறும்போது..... "இதைப் பற்றி நான் என்ன சொல்றது, இது முற்றிலும் எதிர்பாராதது, எங்கள் குழுவில் உள்ள அனைவருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. சாகச, கற்பனை வகை படங்களை குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் எப்போதும் விரும்புவார்கள் என்ற நம்பிக்கை எங்கள் மொத்த குழுவுக்கும் இருந்தது. அதனால் தான் மேற்கு நாடுகளில் இந்த காட்சிகள் மாதக்கணக்கில் ஹவுஸ்ஃபுல்லாக ஓடுகிறது. எனினும், எங்கள் தும்பாவிற்கு இந்த வகையான வரவேற்பு கிடைக்கும் என நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை, நாங்கள் இப்போது குழந்தையின் மகிழ்ச்சி மனநிலையில் இருக்கிறோம். புதிய அணியை உள்ளடக்கிய ஒரு படம் இதுபோன்ற வரவேற்பை பெறும் என்று நாங்கள் நினைத்ததில்லை. இந்த படைப்பு மற்றும் புதிய முயற்சிக்கு ஆதரவாக இருந்த என் சகோதரர் அனிருத்துக்கு நன்றி. இந்த வீடியோவின் ஒரு பகுதியாக இருக்க அவர் எந்த யோசனையும் இன்றி ஒப்புக் கொண்டார்" என்றார்.

 

 

தும்பாவில் ஒரு பாடலுக்கு அனிருத் இசை அமைக்கிறார். மற்ற பாடல்களுக்கு இளம் மற்றும் சென்சேஷனல் இரட்டை இசையமைப்பாளர்கள் விவேக்-மெர்வின்  மற்றும் சந்தோஷ் தயாநிதி இசை அமைக்கிறார்கள். எதிர் நீச்சல், காக்கி சட்டை மற்றும் கொடி போன்ற திரைப்படங்களில் துரை செந்தில் குமாரிடம் பணிபுரிந்த ஹரிஷ் ராம் எல்.எச் இயக்குகிறார். இளம் நாயகன் தர்ஷன், தீபா மற்றும் கீர்த்தி பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நரேன் இளன் ஒளிப்பதிவு செய்கிறார். கலைவாணன் படத்தொகுப்பு செய்கிறார். ஆக்‌ஷன் 100 சண்டைப்பயிற்சியையும், வாசுகி பாஸ்கர் மற்றும் பல்லவி சிங் ஆகியோர் ஆடை வடிவமைப்பையும் கவனிக்கிறார்கள். ராம் ராகவ் மற்றும் பிரபாகரன் ஏ.ஆர். வசனம் எழுதியுள்ளனர். குடும்பம், குழந்தைகளை மையப்படுத்திய இப்படம் 2019 கோடை விடுமுறையில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. சுரேகா நியாபதியின் ரீகல் ரீல்ஸ் ஓ.பி.சி பிரைவேட் லிமிடெட் மற்றும் ரோல் டைம் ஸ்டுடியோஸ் எல்.எல்.பி இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனிருத் பாடிய ‘ஆவோ கில்லெல்’ பாடல்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Aao Killelle album song released

அனிருத் குரலில் பிரவின் மணி இசையில் உருவாகியுள்ள ஆல்பம் பாடல் ‘ஆவோ கில்லெல்'. பி ரெடி மியூசிக் இப்பாடலை வெளியிடுகிறது.  ஆவோ கில்லெல் என்பது ஒரு இசை கலைடோஸ்கோப் என்றும் இது தொற்று தாளங்கள், ஆத்மார்த்தமான குரல்கள் மற்றும் விளையாட்டுத்தனமான கூறுகளை இணைக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுரேஷ் பீட்டர்ஸின் ரித்மிக் ராப், வைஷாலி ஸ்ரீ பிரதாப்பின் டல்செட் டோன்கள், நவின் பியின் பாடல் வரிகள் கொண்டு இப்பாடல் உருவாகியுள்ளது. அனைத்து முக்கிய ஸ்ட்ரீமிங் தளங்களிலும் இப்பாடல் இருக்கிறது. 

Next Story

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் விஜய் சேதுபதி பட நடிகை

Published on 14/02/2024 | Edited on 14/02/2024
sivakarthikeyan ar murugadoss movie update

கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். படத்திற்கு இன்னும் பெயரிடப்படாத நிலையில், தற்காலிகமாக 'எஸ்.கே 21' என அழைக்கப்படுகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. இப்படத்தின் டைட்டில் டீசர் வருகிற 16 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. சிவகார்த்திகேயன் பிப்ரவரி 17 ஆம் தேதி பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அதை முன்னிட்டு வெளியாகவுள்ளதாகத் தெரிகிறது.

இப்படத்தை தொடர்ந்து, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது படத்திற்காக கை கோர்த்துள்ளார் சிவகார்த்திகேயன். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடிக்கவுள்ளதாகவும் அதற்கான டெஸ்ட்  ஷூட் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளதாகவும் தகவல் வெளியானது. மேலும் மலையாள முன்னணி நடிகர் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் வில்லனாகத் துப்பாக்கி பட வில்லன் வித்யுத் ஜாம்வால் நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்பட்டது. 

இந்த நிலையில், இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளதாகப் பரவலாக சொல்லப்படுகிறது. இப்படத்தில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. கன்னட படங்களில் கவனம் செலுத்தி வரும் இவர், தமிழில் விஜய் சேதுபதியின் 51வது படத்தில் நடிக்கிறார். இவரைத் தவிர்த்து இசையமைப்பாளராக அனிருத் சிவகார்த்திகேயன் படத்தில் பணியாற்றவுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்பட பூஜை தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.