Published on 09/11/2018 | Edited on 09/11/2018

அமீர்கான் நடிப்பில் நேற்று வெளிவந்த 'தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்' படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றுவரும் நிலையில் இப்படம் இந்தியாவில் மட்டுமே முதல் நாள் ரூ 60 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. வரலாற்று படமாக உருவாகியுள்ள இப்படத்தில் அமிதாபச்சன், காத்ரினா கைப், பாத்திமா சனா ஷேய்க் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் அமீர்கான் நடிப்பில் வெளியான 'தங்கல்' படம் ரூ 2000 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.