/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/130_42.jpg)
நாயகன் படத்திற்கு பிறகு நீண்ட இசைவெளிக்குப் பிறகு ‘தக் லைஃப்’ படம் மூலம் மணிரத்னம் - கமல்ஹாசன் இருவரும் கூட்டணி வைத்துள்ளனர். இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமலுடன் இணைந்து ரெட் ஜெயண்ட் நிறுவனம் வழங்குகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தின் முதல் பாடலாக முன்பு வெளியான ‘ஜிங்குச்சா’ மற்றும் அண்மையில் வெளியான ட்ரைலர் ஆகியவை நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 24ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்த நிலையில் படத்தின் செகண்ட் சிங்கிளான ‘சுகர் பேபி’ பாடல் லிரிக் வீடியோவுடன் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் த்ரிஷா ஆரம்பத்தில் பாடுவது போல் காட்சிகள் ஆரம்பிக்கிறது.
பின்பு அவர் நடிகையாகவும் இப்பாடலில் நடிப்பது போலவும் காட்சிகள் இடம் பெறுகிறது. இடையில் கமலுடன் அவர் காதலுடன் விளையாடுவது போன்ற சில புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளது. அதற்கேற்றவாறு ‘கள்ளம் உள்ள நெஞ்சு, காதலென்ற நஞ்சு, கண்ணை மூடிக்கொண்டு என்னை மட்டும் கொஞ்சு’ வரிகள் இடம்பெற்றுள்ளது. பின்பு கமல் எதிரிகளை அடிக்கும் ஆக்ஷன் காட்சிகளும் அடுத்தடுத்து வருகிறது. இப்பாடலுக்கு சிவா ஆனந்த் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் எழுதியுள்ளனர். அலெக்ஸாண்ட்ரா ஜாய், ஷுபா, சரத் சந்தோஷ் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)