மணிரத்னம் - கமல் இருவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்த ‘தக் லைஃப்’ படம் கடந்த மாதம் 5ஆம் தேதி வெளியானது. இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்த இப்படத்தை கமலுடன் இணைந்து ரெட் ஜெயண்ட் நிறுவனம் வழங்கியது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது.
முன்னதாக படத்தின் இசை வெளியீட்டு விழாவில், கமல் பேசிய கருத்து கர்நாடாகாவில் சர்ச்சையானது. அவர் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று பேசிய நிலையில் அது கர்நாடகாவில் கொதி நிலையை ஏற்படுத்தியது. கமல் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவரது படங்கள் கர்நாடகாவில் வெளியாகாது என்றுஎச்சரிக்கைகள் எழுந்தது. ஆனால் கமல் 'அன்பும் மன்னிப்பு கேட்காது' என அவரது பாணியில் திட்டவட்டமாக மன்னிப்பு கேட்க முடியாது என சொல்லிவிட்டார். இதனால் கர்நாடகாவில் படம் வெளியாகாவில்லை. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்த நிலையில் படத்தை வெளியிட அரசு முழு பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இருப்பினும் அங்கு இன்னும் படம் வெளியாகவில்லை.
இதனிடையே மற்ற மாநிலங்கள் மற்றும் பல நாடுகளில் வெளியான இப்படம் மோசமான விமர்சனத்தை பெற்றது. மேலும் சமூக வலைதளங்களில் ட்ரோல்களுக்கும் உள்ளானது. இப்படத்தின் ஓ.டி.டி. உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருந்தது. ஆனால் ரிலீஸ் தேதி வெளியிடப்படாமல் இருந்தது. முன்னதாக ஓ.டி.டி. வெளியீடு குறித்து பேசிய கமல், இப்படம் திரையரங்க வெளியீட்டுக்கு பின் 8 வாரங்கள் கழித்தே ஓ.டி.டி.யில் வெளியாகும் எனக் கூறியிருந்தார். வழக்கமாக ஒரு படம் 4 வாரங்கள் கழித்து ஓ.டி.டி-யில் வெளியாகும் நிலை இருந்து வரும் சூழலில் 8 வாரங்கள் கழித்து தக் லைஃப் படம் வெளியாகவிருந்தது திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. மேலும் இது குறித்து பேசிய கமல்ஹாசன், இந்த முயற்சியை நாங்கள் தான் முதலில் செய்கிறோம் என்றும் இதனை மற்றவர்களும் பின்பற்ற வேண்டும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். ஆனால் சமீபத்தில் பேசிய ஒப்பந்தத்தை விட நெட்பிளிக்ஸ் சீக்கிரம் ஓ.டி.டி-யில் வெளியிடப் போவதாகவும் இதற்காக ஒரு தொகை நெட்பிளிக்ஸ் படக்குழுவிடம் கேட்டதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் படம் நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகியுள்ளது. கமல் சொன்னது போல் 8 வாரங்கள் கழித்து வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் வாடிக்கைப் படி 4 வாரங்கள் கழித்தே படம் வெளியாகியிருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/07/03/496-2025-07-03-13-13-42.jpg)