/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/84_41.jpg)
மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் நாயகன் படத்திற்கு பிறகு உருவாகி வரும் திரைப்படம் ‘தக் லைஃப்’. இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமலுடன் இணைந்து ரெட் ஜெயண்ட் நிறுவனம் வழங்குகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ கடந்த வருடம் கமல்ஹாசனின் பிறந்தநாளான நவம்பர் 7ஆம் தேதி வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய நிலையில், கடந்த மே மாதம் சிம்பு இணைந்திருப்பதாக அவருக்கு ஒரு அறிமுக வீடியோ வெளியிட்டது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு செர்பியா, அயர்லாந்து, ராஜஸ்தான், டெல்லி, கோவா, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுது. பின்பு படத்தின் டப்பிங் பணிகளை கமல்ஹாசன், சிம்பு ஆகியோர் தொடங்கியிருந்தனர்.
இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம் முடிவடைந்தது. இந்த நிலையில் கமல்ஹாசனின் பிறந்தநாளான இன்று படத்தின் ரிலீஸ் தேதி டீசர் வெளியாகியுள்ளது. இதில் கமலும் சிம்புவும் ஆக்ஷனில் ஈடுபடும் காட்சிகள் இடம்பெறுகிறது. இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு இதே நாளில் வெளியான அறிவிப்பு வீடியோவில் இப்படம் இந்தாண்டு வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)