thug life crew members shocked regards movie leaked in online

மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய ‘தக் லைஃப்’ படம் இன்று(05.06.2025) உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. ஆனால் கர்நாடகாவில் மட்டும் வெளியாகவில்லை. கமல் பேசிய மொழி விவகாரம் தொடர்பாக தொடர் எதிர்ப்பு அங்கு நீடித்து வரும் நிலையில் படக்குழுவே படத்தின் வெளியீட்டை ஒத்திவைத்துள்ளது. மேலும் கர்நாடக வர்த்தக சபையிடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. இது தொடர்பான வழக்கு கர்நாடக உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அடுத்த கட்ட விசாரணை வரும் 10ஆம் தேதி நடக்கவுள்ளது. அதனால் அதன் பிறகே கர்நாடகாவில் தக் லைஃப் படம் வெளியாகுமா இல்லையா என்பது குறித்து தெரிய வரும்.

Advertisment

இந்த சூழலில் மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வெளியான தக் லைஃப் படத்தை கமல் ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர். திரையரங்க வளாகத்திற்குள் பேனர் வைத்தும் பட்டாசு வெடித்தும் பட வெளியீட்டை கொண்டாடினர். இவர்களோடு சிம்பு ரசிகர்களும் பேனர் வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் முதல் காட்சி, காலை 9 மணிக்கு தொடங்கியது. இது சிறப்பு காட்சி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காட்சிக்கு, ரசிகர்கள் அதிகாலை முதலே பல்வேறு திரையரங்குகளில் கூடி மேளதாளத்துடன் ஆட்டம் ஆடி படத்தை கொண்டாட்டமாக வரவேற்றனர். கர்நாடகாவில் படம் வெளியாகாததால் அங்குள்ள சில கமல் ரசிகர்கள் தமிழகத்துக்கு வந்து படம் பார்த்தனர்.

Advertisment

இந்த நிலையில் இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இதனிடையே இப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. குறிப்பாக படக்குழுவினர் சட்ட விரோதமாக இணையத்தில் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்திடம் முறையிட்டு அதற்கான தடையை பெற்றிருந்தது. நீதிமன்ற உத்தரவை மீறியும் படம் இணையத்தில் கசிந்துள்ளதால் படக்குழுவினர் தற்போது அதிர்ச்சியில் உள்ளனர்.