/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/57_84.jpg)
நாயகன் படத்திற்கு பிறகு நீண்ட இசைவெளிக்குப் பிறகு ‘தக் லைஃப்’ படம் மூலம் மணிரத்னம் - கமல்ஹாசன் இருவரும் கூட்டணி வைத்துள்ளனர். இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமலுடன் இணைந்து ரெட் ஜெயண்ட் நிறுவனம் வழங்குகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கமல், மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், சிம்பு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில் கமல், படத்தில் நடித்த முக்கிய நடிகர்கள் பற்றியும் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றியும் தனது கருத்துகளை கூறினார்.
அந்த வகையில் படத்தில் நடித்த மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் குறித்து பேசுகையில், “எனக்கு ஜோஜு யாருன்னே தெரியாது. அவர் நடித்த இரட்டா படத்தை பார்த்தேன். அவர் டபுளில் ரோலில் நடித்திருந்தார். நான் இதுவரை 30க்கும் மேற்பட்ட டபுள் ரோலில்நடித்திருக்கிறேன். ஒவ்வொரு படத்திலும் கெட்டப்பில் எதாவது வித்தியாசம் காண்பிப்பேன். மைக்கேல் மதன காம ராஜன் படத்தில் மட்டும் ரொம்ப மேக்கப் இல்லாமல் நடித்தேன். ஆனால் ஜோஜு ஜார்ஜ், தன்னுடைய ஆரம்பக்கால படங்களிலே டபுள் ரோலில் நடித்திருக்கிறார். இரட்டா படத்தில் இரட்டையர்களாக நடித்து இரண்டு கதாபாத்திரத்துக்கும் வித்தியாசம் காட்டியிருந்தர். அதை பார்க்கும் போது, நான் பார்த்து பொறாமை படும் நடிகர்களில் அவரும்ஒருவராக மாறிவிட்டார்” என்றார். உடனே கீழிருந்த ஜோஜு ஜார்ஜ் எழுந்து நின்று கமலுக்கு நன்றி தெரிவித்தார். பின்பு உட்கார்ந்ததையடுத்து சிறிது நேரம் து கண்கலங்கியபடி எமோஷ்னலாக காணப்பட்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)