Advertisment

"என் பெயரை காப்பாற்று என விஷால் சொன்னார்" - விஷால் பட இயக்குனர் பெருமிதம்!

lkkgjgjg

Advertisment

எது தேவையோ அதுவே தர்மம் குறும்படம் மூலம் பிரபலமான அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கும் 'வீரமே வாகை சூடும்' படத்தில் விஷால் நடித்துவருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாத்தி நடிக்க, வில்லனாக பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் நடிக்கிறார். யோகிபாபு, பி.என்.ஆர். மனோகர், கவிதா, மரியம் ஜார்ஜ், தீப்தி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ஜனவரி 26 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில்

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். அப்போது விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் து.ப.சரவணன் பேசும்போது... "அனைவருக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள். இந்த கதை வெற்றியடையும் என ஊக்கமளித்தவர் கருந்தேள் ராஜேஷ். அதேபோல், இறுதி வரை துணையாக இருந்தவர் பொன் பார்த்திபன். இந்த வாய்ப்பு குடுத்த விஷால் சாருக்கு நன்றி. இன்று நான் இங்கு நிற்பதற்கு காரணம் விஷால் சார் தான்.

இப்படத்தின் கதையை விஷால் சாரிடம் கூறிய பிறகு, யுவனிடம் போய் கதை சொல்லுங்கள் என்றார். பிறகு யுவன் சாரிடம் 30 நிமிடம் என்று தான் கதை சொல்ல ஆரம்பித்தேன். ஆனால், ஒன்றரை மணி நேரம் ஆனது. பிறகு விஷால் சார் என்னை அழைத்து, யுவன் கதை ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்னார். அந்த பெயரைக் காப்பாற்று என்றார். அது இந்த நிமிடம் வரை என் மனதில் அப்படியே இருக்கிறது. அதை ஓரளவு நிறைவெற்றியிருக்கிறேன் என்று நம்புகிறேன்" என்றார்.

Advertisment

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/Z0sxnGFYYB0.jpg?itok=8XsqqBDW","video_url":" Video (Responsive, autoplaying)."]}

Veeramae Vaagai Soodum Thu Pa Saravanan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe