Advertisment

ரஜினிக்கு மூன்று வில்லன்கள்...

பேட்ட படத்தை தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் என்றொரு படத்தில் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக நடைபெறும் இப்படத்தின் ஷூட்டிங் மூன்றாவது கட்டத்தை எட்டியுள்ளது. முழுக்க முழுக்க மும்பையில் இப்படத்தின் ஷூட்டிங் எடுக்கப்படுகிறது.

Advertisment

rajnikanth darbar

ரஜினிக்கு நயன்தாரா ஜோடியாக நடிக்க, நிவேதா தாமஸும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பாஹி 2 வில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த பிரதீக் பாபர் தர்பார் படத்தில் இணைந்தார். சுனில் ஷெட்டி, பிரதீக் பாபரின் தந்தையாக நடிக்கிறார். இவர்களைத் தொடர்ந்து நவாப் ஷாவும் வில்லன் பாத்திரத்தில் இணைந்துள்ளார்.

அனிருத் இரண்டாவது முறையாக ரஜினியின் படத்திற்கு இசையமைக்கிறார். பல வருட இடைவெளிக்கு பிறகு ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் மேற்கொள்கிறார். 2020 ஆண்டு பொங்கலை குறி வைத்து இப்படத்தின் பணிகள் வேகமான நடைபெற்று வருகிறது.

darbar rajnikanth
இதையும் படியுங்கள்
Subscribe