va deal

கரோனா அச்சுறுத்தல் காரணமாகத் திரையரங்கங்கள் மூடப்பட்டுள்ளன. மீண்டும் திரையரங்குகள் திறக்க மூன்று மாதங்களுக்கு மேலாகஎடுத்துக்கொள்ளும் என்று சொல்லப்படுகிறது.

Advertisment

இதனால் உலகம் முழுவதும் இந்த வருடம் வெளியாகத் திட்டமிட்டிருந்த படங்களின் ரீலிஸ் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. சில படங்கள் நேரடியாக ஓ.டி.டி. எனப்படும் டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் வெளியாகி வருகின்றது. இதுவரை ஜோதிகா நடிப்பில் 'பொன்மகள் வந்தாள்' படம் வெளியாகியுள்ளது. 'பெண்குயின்' படம் வருகிற 19ஆம் தேதி வெளியாக இருக்கின்றது.

Advertisment

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் ஜே.சதிஷ்குமார் தனது ட்விட்டர் பக்கம் மூலம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''எங்கள் ஜே.எஸ்.கே. ஃபிலிம் கார்ப்பரேசன் தயாரித்துள்ள படங்களான 'அண்டாவக் காணோம்', 'வா டீல்', 'மம்மி சேவ் மீ' ஆகிய படங்கள் நேரடியாக ஓ.டி.டியில் வெளியாகவுள்ளதை அறிவிப்பதில் மகிழ்ச்சி. மேலும் நாங்கள் அடுத்ததாகத் தயாரிக்கவிருக்கும் 3 படங்களின் நடிகர்கள் தொழில்நுட்பக் கலைஞர்களின் அறிவிப்பையும் விரைவில் வெளியிடவிருக்கிறோம். எப்பொழுதும் போல் உங்கள் ஆதரவு தேவை'' என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக கரோனா ஊரடங்கு சமயத்தில்தான் ஜே. சதிஷ்குமார் ஓ.டி.டி. ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தினார்.

Advertisment