பாலிவுட் திரைப்படங்களில் பல படங்களுக்கு இசையமைப்பாளர் விஷாலுடன் இணைந்து இசையமைப்பாளராக பணிபுரிந்தவர் சேகர் ராவ்ஜியானி. சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான வார், பாரத் உள்ளிட்ட படங்களுக்கும், ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களிலும் இசை அமைத்துள்ளது விஷால்-சேகர் ஜோடி.

Advertisment

sekar bill

இந்நிலையில் சேகர் ராவ்ஜியானி ட்விட்டரில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் மூன்று முட்டைக்கு ரூ. 1672 பில் போட்டிருப்பதை பதிவிட்டுள்ளார்.

சேகர் அஹமதாபாத்திலுள்ள ஹயாட் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சாப்பிட சென்றபோது, மூன்று முட்டை ஆர்டர் செய்திருக்கிறார். அப்போதுஅந்த மூன்று முட்டைக்கு வந்த பில்லை பார்த்து ஷாக்கான சேகர் பில்லை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதை பார்த்த இணையவாசிகளும் ஷாக்காகி, இந்த சம்பவத்தை கலாய்த்து வருகின்றனர்.

Advertisment

ஏற்கனவே விஸ்வரூபம் படத்தில் வில்லனாக நடித்த ராகுல் போஸ் மாரியட் ஹோட்டலில் இரண்டு வாழைப்பழம் வாங்கியதற்கு ஜி.எஸ்.டியுடன் மூன்ணூறு ரூபாய் பில் போட்டதை பதிவிட்டிருந்தார். அந்த சம்பவம் பொது மக்களிடையே பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி விவாத பொருளாக மாறியது. ஹோட்டலுக்கு அபராதமும் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.