Advertisment

ரூ.50 லட்சம் - ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல்

threat to sharuk khan

பாலிவுட்டின் டாப் நடிகரான ஷாருக்கான் கடைசியாக டங்கி படத்தில் நடித்திருந்தார். அண்மையில் கடந்த 4ஆம் தேதி தனது 59வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இந்த நிலையில் இவரை கொலை செய்து விடுவதாக மும்பை காவல் நிலையத்திற்கு போன் வந்துள்ளது. அதில் பேசிய நபர், “ஷாருக்கான் ரூ.50 லட்சம் தரவில்லை என்றால் கொன்று விடுவேன்” என்றிருக்கிறார். அவரிடம் என்ன நோக்கத்திற்காக மிரட்டல் விடுக்கிறாய்? யார் நீ? என்று காவல் துறை கேள்வி எழுப்பிய போது, “அது முக்கியமில்லை. உங்களுக்கு வேண்டுமென்றால் என்னுடைய பெயரை ஹிந்துஸ்தானி என எழுதிக்கொள்ளுங்கள்” என்று பதிலளித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக மிரட்டல் விடுத்த நபர் மீது மும்பை பந்த்ரா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபரில் ஷாருக்கான் நடித்த பதான் மற்றும் ஜவான் பட வெற்றிக்காக மகாராஷ்டிரா அரசாங்கத்துக்கு ஷாருக்கானை கொலை செய்துவிடுவதாக மிரட்டல் வந்திருந்தது. இதையடுத்து அவருக்கு ஒய் ப்ளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இந்த சூழலில் மீண்டும் அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டல் வந்திருப்பது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ஏற்கனவே பாலிவுட்டின் மற்றொரு முன்னணி நடிகரான சல்மான் கானுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். சமீபத்தில் அவர் ரூ.5 கோடி வழங்க வேண்டும், இல்லையென்றால் கொன்று விடுவோம் என மும்பை போக்குவரத்து காவல்துறைக்கு மெசேஜ் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

sharukh khan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe