Advertisment

1000 அடியில் பேனர்; காவல்துறை கண்டிப்பு - சிம்பு ரசிகர்கள் அட்ராசிட்டி

Thousand Feet banner for simbu maha movie

ஹன்சிகாவின் 50-வது படமாக உருவாகியிருக்கும் படம் ‘மஹா’. ஜமீல் இயக்கியுள்ள இப்படத்தை 'எட்ஸெட்ரா எண்டெர்டெய்ன்மெண்ட்' நிறுவனம் தயாரித்துள்ளது. சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் டீசர் மற்றும் ஒரு பாடல் வெளியானது. இப்படம் ஜூலை 22 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இப்படத்தில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதையொட்டி அவரது ரசிகர்கள் மகா படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். மதுரை குருவிக்காரன் சாலை மேம்பாலத்தின் மீது மதுரை சிட்டி எஸ்.டி.ஆர் வெறியர்கள் என்ற பெயரில் 1000 அடி நீளத்தில் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அனுமதி இல்லாமல் 1000 அடியில் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டதை அடுத்து காவல்துறையினர் கண்டித்தனர். அதன் பிறகு அந்த பிளக்ஸ் பேனர் நீக்கப்பட்டது. இருப்பினும் பிளக்ஸ் பேனரை அகற்றுவதற்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisment

madurai hanshika motwani actor simbu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe