Advertisment

இறுதிக்கட்ட பணிகளில் வேகம்காட்டும் 'தோர்: லவ் அண்ட் தண்டர்' படக்குழு 

'Thor: Love and Thunder' film crew accelerating the final stages

Advertisment

ஆஸ்கார் விருது பெற்ற டைகா வெயிட்டிடி இயக்கத்தில் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், டெஸ்ஸா தாம்சன், நடாலி போர்ட்மேன், கிறிஸ்டியன் பேல் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தோர்: லவ் அண்ட் தண்டர்'. இப்படத்தின் ட்ரைலர் கடந்த 18ஆம் தேதி வெளியானது. இயக்குநர் டைகா வெயிட்டிடியின் அசல் அம்சங்கள், ஆக்‌ஷன் பேக் செய்யப்பட்ட ஸ்டைலான மற்றும் வேடிக்கையான காட்சிகள் இடம்பெற்ற இந்த ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் வெகுவாகக் கவனம்பெற்றதோடு, படம் குறித்த எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியுள்ளது.

இப்படம் ஜூலை 8ஆம் தேதி ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் , மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தியாவில் வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான டப்பிங் உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு வேகம்காட்டி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

marvel studios
இதையும் படியுங்கள்
Subscribe