Advertisment

இந்திய ரசிகர்களுக்காக வீடியோ வெளியிட்ட ‘தோர்’ பட நாயகன்...

மார்வெல் சூப்பர் ஹீரோவான தோர் கதாபாத்திரத்தில் நடித்து, உலகம் முழுவதும் பிரபலமான நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த். அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தில் நடித்ததைத்தொடர்ந்து நெட்பிளிக்ஸில்,ரஸோ பிரதர்ஸ் தயாரிப்பில் உருவான எக்ஸ்ட்ராக்‌ஷன் என்ற படத்தில் நடித்துள்ளார்.

Advertisment

chris hemsworth

முதலில் இப்படத்திற்கு தாகா என்றுதான் பெயரிடப்பட்டது. பின்னர், எக்ஸ்ட்ராக்‌ஷன் என்று மாற்றியது நெட்பிளிக்ஸ் நிறுவனம். இந்த படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் இந்தியாவிலுள்ள அகமதாபாத், மும்பை பாந்த்ரா உள்ளிட்ட பகுதிகளில் உருவானது. மேலும் இப்படத்தில் ரந்தீப் ஹூடா, பங்கஜ் த்ரிபதி, பியான்ஷு பைன்யுல்லி உள்ளிட்ட பல இந்திய நடிகர்கள் நடித்துள்ளனர்.

Advertisment

இந்த படத்தின் புரொமோஷனுக்காக கிறிஸ், மார்ச் 16ஆம் தேதி இந்தியா வருவதாக இருந்தது. கரோனா அச்சத்தால் இந்தியா முழுவதும் லாக்டவுனில் இருப்பதால் நிகழ்ச்சி ரத்தானது. இந்நிலையில் இன்று இப்படத்தின் ட்ரைலர் முழு ஆக்‌ஷன் பேக்குடன் வெளியாகியுள்ளது.

nakkheeran app

முன்னதாக நேற்று நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் ட்ரைலர் வெளியாவதை முன்னிட்டு, இந்திய ரசிகர்களுக்காக வீடியோ ஒன்றைபேசி வெளியிட்டிருந்தார். அதில், "நமஸ்தே இந்தியா. ஆஸ்திரேலியாவிலிருந்து கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் பேசுகிறேன். இந்தியாவில் நடைபெற்ற இந்தப் படத்தின் படப்பிடிப்பை மறக்கவே முடியாது. மீண்டும் அங்கு வர ஆவலாக இருக்கிறேன்.

ஆனால், இப்போது உலகில் என்ன நடக்கிறது என உங்கள் அனைவருக்கும் தெரியும். உங்களைப் போலவே நானும் வீட்டில் இருக்கிறேன். இப்போது அனைவருக்கும் கடினமான சூழல் என்று எனக்குத் தெரியும். எனவே நீங்கள் ரசிப்பீர்கள் என்று ஒரு விஷயத்தைப் பகிர விரும்பினேன். அடுத்து வெளிவரவுள்ள எனது எக்ஸ்ட்ராக்‌ஷன் படத்தின் ட்ரைலரை எதிர்பார்த்து இருங்கள். இது ஒரு அற்புதமான ஆக்‌ஷன் படம். என் நண்பர் சாம் ஹர்க்ரேவ் இயக்கியது. ஏப்ரல் 24 அன்று நெட்ஃபிளிக்ஸ் இந்தப் படத்தை உலகம் முழுவதும் வெளியிடுகிறது.

இந்தப் படத்தில் சிறந்த இந்திய நடிகர்கள் சிலருடன் நடித்ததில் எனக்குப் பெருமையாக உள்ளது. நீங்கள் அனைவரும் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்று காத்திருக்கிறேன். அனைவருக்கும் என் அன்பு, நல்லெண்ணங்கள். வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள், ஆரோக்கியமாக இருங்கள்" என்று அதில்தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe