Advertisment

தளபதி 67 - விஜய்யுடன் மோதும் வில்லன் யார்? - நடிகரை களமிறக்கிய படக்குழு

thlapathy 67 update sanjay dutt on board

விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியான 'வாரிசு' படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றாலும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. வசூலிலும் ரூ. 250 கோடியை ஈட்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், சில தினங்களுக்கு முன்பு படத்தின் வெற்றி விழாவை படக்குழுவினர் கொண்டாடியுள்ளார்கள்.

Advertisment

இப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படத்தின் பூஜை கடந்த மாதம் நடைபெற்ற நிலையில், நேற்று படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அனிருத் இசையில் உருவாகும் இப்படம் 'லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்' வகையில் உருவாகிறதா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்து கொண்டே வருகிறது.

Advertisment

இந்த வாரம் தொடர்ந்து இப்படத்தின் அப்டேட் வெளியாகும் என படக்குழு தெரிவித்த நிலையில் தற்போது படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நடிகர்கள் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இணைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக போஸ்டர் வெளியிட்டுள்ள படக்குழு, அதில் "தளபதி67 படத்தின் ஒன் லைனைக் கேட்டபோது, ​​இந்தப் படத்தில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என நினைத்தேன்" என சஞ்சய் தத் கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக சஞ்சய் தத் வில்லனாக நடிப்பதாக சொல்லப்பட்ட நிலையில், படக்குழு வில்லன் என சொல்லவில்லை. இருப்பினும் அவர் வில்லன் கதாபாத்திரத்தில் தான் நடிக்கிறார் என திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியில் பல படங்களில் நடித்துள்ள சஞ்சய் தத், 'கே.ஜி.எஃப் 2' படத்தின் மூலம் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து கன்னட திரையுலகில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து தற்போதுதளபதி67 படத்தின் மூலம் வில்லனாக தமிழ்த் திரையுலகிலும் அறிமுகமாகிறார்.

actor vijay lokesh kanagaraj Sanjay Dutt thalapathy 67
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe