Thiyagi Boys Music Video song out now

Advertisment

இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி தற்போது 'வல்லான்', 'தலைநகரம் 2' மற்றும் 'ஒன் 2 ஒன்' படங்களில்பிசியாக நடித்து வருகிறார். இதனிடையேஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிப்பில் காஃபி வித் காதல் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில்மாளவிகா சர்மா, அமிர்தா மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="e0ae3663-ff41-4b3c-9ae8-c90d4eca6bfa" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Poikaal-Kuthirai-500-X-300-Article-Ad_34.jpg" />

இந்நிலையில் இப்படத்தின் தியாகி பாய்ஸ் என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. பேரரசு வரிகளில், யுவன் சங்கர் ராஜா மற்றும் ஹிப் ஹாப் தமிழா ஆதி இருவரும் இணைந்து பாடியுள்ளனர். ஆண்களின் காதல் தோல்விகளை கலர்புல்லாக வைத்து உருவாகியுள்ள இப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment