Advertisment

அவர்கள் இருவரும் விஸ்வாசம் படத்தின் இரு தூண்கள் - சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் 

viswasam

சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் தியாகராஜன் தயாரித்து அஜித் - சிவா கூட்டணியில் நான்காவது படமாக உருவாகியிருக்கும் 'விஸ்வாசம்' படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாக தயாராகி வரும் நிலையில் படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல பெற்று வரும் நிலையில் இப்படத்திற்கு தணிக்கைக் குழுவில் `யு' சான்றிதழை பெற்றுள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் ட்விட்டரில் அதிகாரப்பூர்மாக அறிவித்தது. இந்நிலையில் இப்படம் குறித்து பட தயாரிப்பாளர் தியாகராஜன்

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

"எங்களது நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் குடும்பத்தோடு வந்து பார்க்கும் வகையில் படங்களை தருவதில் மிகவும் முனைப்போடு இருப்போம். தற்போது எங்கள் தயாரிப்பில் வெளிவர இருக்கும் 'விஸ்வாசம்' படத்துக்கு தணிக்கை அதிகாரிகள் "U" சான்றிதழ் தந்ததில் எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. எங்கள் நிறுவனத்தின் சார்பில் நாயகன் அஜித் குமார் சாருக்கும், இயக்குனர் சிவாவுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி. அவர்கள் இருவரும் தூண்களாக இருந்து உழைத்து இருக்கிறார்கள். எல்லா தரப்பினரையும் கவரும் படமாக 'விஸ்வாசம்' அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இசையமைப்பாளர் டி இமானின் இசை பொங்கல் கொண்டாடத்துக்கு உகந்த வாறு பட்டையை கிளப்பி கொண்டு இருக்கிறது. மாநகரம் முதல் குக்கிராமம் வரை பட்டி தொட்டி எங்கும் இந்த படத்தின் பாடல்கள் செம்ம ஹிட்" என்றார். மதுரை பின்னணியில் உருவாகும் 'விஸ்வாசம்' படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

sathyajothifilms siva viswasam ajith
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe