நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கைவசம் தற்போது ‘பூமிகா’, ‘திட்டம் இரண்டு’, ‘டிரைவர் ஜமுனா’, ‘துருவ நட்சத்திரம்’, ‘இது வேதாளம் சொல்லும் கதை’, ‘இடம் பொருள் ஏவல்’ உள்ளிட்ட படங்கள் இருக்கும் நிலையில்,'திட்டம் இரண்டு' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. கரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு தொடங்கப்பட்ட இதன் படப்பிடிப்பு, ஒரே கட்டமாக முடிக்கப்பட்டுள்ளது. மிஸ்ட்ரி த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தை விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ளார். தினேஷ் கண்ணன் மற்றும் வினோத் குமார் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ள 'திட்டம் இரண்டு' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
Advertisment