/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/233_5.jpg)
விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'திட்டம் இரண்டு'. திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பானது கடந்த ஜனவரி மாதத்தின் இறுதியில் நிறைவுபெற்றது. படத்தின் அனைத்து காட்சிகளும் சென்னையிலேயே படமாக்கப்பட்டன.
படத்தின் அனைத்துப் பணிகளையும் நிறைவு செய்துள்ள படக்குழு, படத்தின் ரிலீஸிற்காக காத்திருக்கிறது. தற்போது கரோனா இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்துவருகிறது. அதற்கேற்ப ஊரடங்கிலும் தளர்வுகள் அளிக்கப்பட்டுவருகின்றன. விரைவில் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், மக்களின் வருகை எந்த அளவிற்கு இருக்கும் என்பது குறித்து திரைத்துறையினர் மத்தியில் பெரும் சந்தேகம் நிலவிவருகிறது. இந்த நிலையில், 'திட்டம் இரண்டு' படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது. இதற்காக முன்னணி ஓடிடி நிறுவனம் ஒன்றிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாகவும்கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)