திருப்பதி பிரதர்ஸ் சார்பாக இயக்குனர் லிங்குசாமி தயாரிப்பில், விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், நந்திதா ஸ்வேதா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இணைந்து நடித்து, தேசிய விருது இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான படம் 'இடம் பொருள் ஏவல்'. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகி நீண்ட வருடங்கள் ஆன நிலையில் இப்படம் கரோனா நெருக்கடி முடிந்து ஜூலை மாதத்தில் வெளியாகும் எனத் தகவல் வெளியானது. இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்து படக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில்...
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p3', [300, 250], 'div-gpt-ad-1584956668553-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p1', [300, 250], 'div-gpt-ad-1584957472633-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
''எங்கள் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்து இயக்குனர் சீனுராமசாமிஅவர்கள் இயக்கிய "இடம் பொருள் ஏவல்" திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகிறது என்று சிலர் ட்விட்டரில் செய்தி பரப்பி வருவதாக தெரிகிறது. திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இடம் பொருள் ஏவல் ரீலீஸ் தேதி குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தெரிவித்து கொள்கிறோம். கரோனா தொற்று ஊரடங்கு முடிந்த பின்பு, எங்கள் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுடன் கலந்து பேசி, எங்கள் திரைப்படத்திற்கு ஒரு நல்ல ரிலீஸ் தேதியை அறிவிப்போம். அதுவரை தவறான செய்திகளை பகிர வேண்டாம் என்று எங்கள் நிறுவனம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி,
என்.சுபாஷ் சந்திர போஸ்,
தயாரிப்பாளர்,
திருப்பதி பிரதர்ஸ்'' என குறிப்பிட்டுள்ளனர்.