Skip to main content

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவர்களுக்கு அட்வான்ஸ் கொடுத்தேன். ஆனால் யாரும் வரவில்லை - சு.திருநாவுக்கரசர் ஆதங்கம்!

Published on 09/09/2019 | Edited on 09/09/2019

எல்.எஸ்.தியன் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.நட்சத்திரம் செபஸ்தியான் தயாரித்துள்ள படம் 'படைப்பாளன்'. கதைத்திருட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை எல்.எஸ்.பிரபுராஜா எழுதி இயக்கியிருக்கிறார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எம்.பி சு.திருநாவுக்கரசர் பேசும்போது...

 

hdhdf

 

"ஒரு நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது நிறையபேர் மகிழ்ச்சியோடு வந்து அமர்வார்கள். நேரம் ஆனதும் எப்படா முடியும் என்று தோன்றும். எனக்கு சினிமாவில் சில அனுபவம் உண்டு. சில படங்கள் தயாரிக்க, நடிக்க என்று இருந்தேன். திரைக்கதையும் எழுதியிருக்கிறேன். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சில நடிகர்களுக்கு அட்வான்ஸ் கொடுத்திருந்தேன். அவருக்கும் எனக்கும் பிரச்சனை என்பதால் யாரும் நடிக்க வரவில்லை. இந்தப்படத்தின் இயக்குநர் தம்பி பிரபுராஜா மிகவும் துடிப்பான இளைஞன். அவரை எனக்கு லயோலா காலேஜில் படிக்கும் போதே தெரியும். அவரை எப்போது பார்த்தாலும் ஊக்கப்படுத்துவேன். மிகவும் மன உறுதியோடு செயல்படக்கூடியவர். இந்தப்படத்தை முழுமையாக பிரபுராஜா முடித்து விட்டார் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு திரைப்படம் வெற்றி பெறுவதற்கு கதை தான் முதல் முக்கியம். கதை தான் ஹீரோ. நடிகர்கள் எல்லாம் இரண்டாவது தான். எம்.ஜி.ஆருக்கு கூட தோற்ற படங்கள் உண்டு. ஆக கதை தான் எப்பவும் முக்கியம். அதேபோல் அடுத்தடுத்த காட்சிகள் பெரிய சுவாரசியத்தை தர வேண்டும். பிரபுராஜா உதவி இயக்குநராக ரொம்ப கஷ்டப்பட்டவர். நிறையபேரிடம் கதைகளைச் சொல்லியும் இருக்கிறார். 

 

 

அதனால் அவரது அனுபவம் தான் இந்தப்படம். உண்மையிலே உதவி இயக்குநர்களின் வாழ்வு மிகவும் கடினமானது தான்.  பலபேர் உதவி இயக்குநர்களாகவே வாழ்க்கையை முடித்திருக்கிறார்கள். ஆனால் பிரபுராஜா மிகவும் சிரமப்பட்டு இப்படத்தை எடுத்திருக்கிறார். படத்தின் இசை சிறப்பாக இருக்கிறது. பாடல்களை கவிஞர்கள் நன்றாக எழுதி இருக்கிறார்கள். கேமராமேன் சூப்பரா பண்ணிருக்கார். கதையின் கருவும் ரொம்ப சிறப்பாக இருக்கு. அது கரண்ட்ல இருக்குற விசயம் என்பதால் நிச்சயம் எல்லாருக்கும் பிடிக்கும்.  சிலபேருக்குத் தான் கேமரா லுக் அமையும். பிரபுராஜாவுக்கு அது நல்லா அமைஞ்சிருக்கு. பெரிய பந்தா எதுவும் இல்லாமல் இயல்பா நடிச்சிருக்கார். ஆக எல்லா வகையிலும் படம் நல்லா வரும். இப்ப சினிமா ரொம்ப கஷ்டத்துல இருக்கு. ஏன் இந்தியாவே ரொம்ப கஷ்டத்துல தான் இருக்கு. சினிமா என்பதே பிரசவ வலி மாதிரி தான். பெரிய நடிகர்கள் பெரிய இயக்குநர்கள் எல்லாம் சம்பளத்தை குறைக்க வேண்டும். சம்பளங்களை குறைச்சா சினிமா இன்னும் சுகாதரமா இருக்கும். ஹெல்த்தியா இருக்கும். அதனால் இந்த விஷயத்தை கன்சிடர் பண்ணலாம். சினிமா நிறையபேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கக் கூடிய தொழில் இது. மற்றபடி என் தம்பி பிரபுவால் எல்லாம் முடியும். உன்னால் முடியும் தம்பி" என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரயில் மறியல் போராட்டம்; 500க்கும் மேற்பட்ட காங்கிரசார் கைது

Published on 15/04/2023 | Edited on 15/04/2023

 

congress party trichy district related incident for rahul gandhi disqualification issue

 

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனைத் தொடர்ந்து அவர் எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.

 

இந்நிலையில் ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 15ல் (இன்று) ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டார்.

 

இதன் ஒரு பகுதியாக திருச்சியில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்திற்கு திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். மேலும் ரயில் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 

 

 

Next Story

ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் விவகாரம்... தமிழக அரசுக்கு சு.திருநாவுக்கரசர் கோரிக்கை...

Published on 20/08/2020 | Edited on 20/08/2020
Su. Thirunavukkarasar

 

 

ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் தொடர்பாக திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான சு.திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

 

"2013-ம் ஆண்டு ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு நடத்தப்பட்டு தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. சுமார் 80 ஆயிரம் பேர் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியருக்கான  தேர்வில் வெற்றி பெற்றனர். ஆனால்  இவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படவில்லை.  இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் 7 ஆண்டு காலம் மட்டும் என கூறப்பட்டுள்ளது. எனவே இதுவரை வேலை கிடைக்காத 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் சான்றிதழ்கள் காலாவதியாகிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. 

 

பேராசிரியர்களுக்கான மத்திய – மாநில தகுதித் தேர்வுகள் மூலம் வழங்கப்படும் சான்றிதழ்கள் ஆயுள் கால சான்றிதழ்களாக வழங்கப்படுகின்றது.  பீகார். ஹரியானா போன்ற மாநில அரசுகள் ஆசிரியர்கள் தகுதித் தேர்வு சான்றிதழ்களின் காலத்தை ஏற்கனவே நீட்டித்துள்ளன. அதுபோல் தமிழக அரசும் ஆயுள் கால சான்றிதழ்களாக தகுதி பெற்றவர்களின் சான்றிதழ் காலத்தை நீட்டித்து தர வேண்டும்.

 

சுமார் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக பணி கிடைக்காமல் அவதியுறும் ஆசிரியர் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்களுக்கு சான்றிதழின் காலத்தை நீட்டித்து தந்தால்தான் வருங்காலத்திலாவது அவர்கள் ஆசிரியர் பணிக்கு செல்ல முடியும்.  இல்லையெனில் அவர்களது வாழ்க்கை கேள்விக்குறியாக அமையும். 

 

நீண்டகாலமாக பணி நியமனம் கிடைக்காமல் உள்ள  பயிற்சி பெற்றவர்களின் அவலம் நீங்கவும், ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தை முறைப்படுத்தி சரி செய்யவும்.  2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச் சங்கத்தின் சார்பில் தமிழக அரசுக்கு விடப்பட்டுள்ள மேற்கண்ட வேண்டுகோளை ஏற்று செயல்படுத்த தமிழக கல்வி அமைச்சர், தமிழக முதல்வர் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.