thirumavalavan wishes vetrimaran

தமிழ் சினிமாவில் கமர்ஷியல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிப் படங்களை கொடுத்து வருபவர் வெற்றிமாறன். மேலும் தான் எடுத்துக் கொண்ட அரசியல் நிலைப்பாட்டில் சமரசமின்றி பயணித்து வருபவர். அதோடு பிரபல நாவல்களை மையக்கருவாக எடுத்து அதற்கு திரைவடிவில் உயிரூட்டி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

Advertisment

அந்த வகையில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை தழுவி விடுதலை படத்தை எடுத்த வெற்றிமாறன் தற்போது விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருகிறார். இதில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் உள்ளிட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசையில் வருகிற டிசம்பர் 20ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில் இன்று வெற்றிமாறன் தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பல்வேறு திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் விடுதலை 2 படக்குழு வாழ்த்து போஸ்டரை பகிர்ந்தது.

Advertisment

இதையடுத்து தற்போது வி.சி.க. தலைவர் திருமாவளவன் எம்.பி வெற்றிமாறனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இயக்குநர் வெற்றிமாறனுக்கு தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தேன். சமூகநீதியின் குரலாய் கலையுலகில் உரத்து முழங்கிவரும் அவர் நீடூழி வாழ்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.